• முகப்பு
  • political
  • முன்னாள் அமைச்சரும் கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்.

முன்னாள் அமைச்சரும் கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, உட்கட்சித் அமைப்பு தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட 38 மாவட்டங்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களாக , முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான S. கோகுல இந்திரா, கழக அமைப்புச் செயலாளர் S. ராஜூ ஆகியோர்கள் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும் தற்போதைய கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் அவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு மாநகராட்சி அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அங்கிருந்து தேர்தல் நடக்கும் தனியார் திருமண மண்டபத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தேர்தல் பொறுப்பாளர்கள் கோகுல இந்திரா, ராஜி அவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கான விருப்ப மனுவை வி.சோமசுந்தரம் தாக்கல் செய்தார். மற்ற யாரும் போட்டியிடாததால் வி சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபும் மாவட்ட கழக செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன், உள்ளிட்ட 8 மாவட்ட நிர்வாக பதவிகளுக்கு விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டு அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் , ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி, உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க பஞ்சாட்சரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,v somasundaram,admk,eps,v somasundaram filed his nomination for the post of kanchipuram Suburban District AIADMK Secretary,Kanchipuram news tamil,Kanchipuram news today,kanchipuram live news

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended