காட்டுக்குள் மேம்பாலம் யாருக்காக?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை திண்டுக்கல் எல்லை அருகே வாடிப் பட்டி வகுத்து மலைப் பகுதியில், வனவிலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி கடந்துசெல்ல 'அனிமல் பாஸ் ஓவர்' மேம்பாலம் அமையவுள்ளது இந்த நெடுஞ் சாலை, பால மேடு அருகே, வகுத்துமலை வனப்பகுதி வழியாக அமைக்கப் படுகிறது. எனவே, அந்த வனப் பகுதியில் வசிக்கும் காட்டுமாடுகள், முயல்கள், குரங்குகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வனவிலங்குகளை பாதுகாக்க, விலங்குகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பாலம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. வனத்தில் விலங்குகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும்போது, குறுக்கிடும் சாலையால், அவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரண்டு மலைகளை இணைத்து, 210 மீட்டரில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக வனத் துறையும் அனுமதி வழங்கியுள்ளது. மேம் பாலம் கட்டும்பணி விரைவில் துவங்கி, அடுத்த ஆண்டில்முடியும் என தேசிய நெடுஞ் சாலைத் துறை தெரிவித்து உள்ளது செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended