• முகப்பு
  • district
  • கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில், பல்வேறு உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை !

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில், பல்வேறு உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கேரள மாநிலத்தில் ஒரு மாணவி உயிரிழக்கவும், தமிழகத்தில் அறந்தாங்கி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் பகுதிகளில் உடல் நலக்குறைவு ஏற்பட காரணமான சவர்மா துரித உணவு, அசைவ பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனையடுத்து மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சித்ரா மேற்பார்வையில், இன்று கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சசிக்குமார், முத்தையன் தலைமையிலான குழுவினர், பத்திற்கும் மேற்பட்ட உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்குள்ள சமையல் கூடங்கள் சுகாதாரமாக உள்ளதா, காலவதியான இறைச்சிகள், காலவதியான உணவு பண்டங்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர் இதில் சுமார் 15 கிலோ அளவிலான கெட்டுப்போன, காலவதியான இறைச்சிகள், மற்றும் சமைத்த உணவு பண்டங்கள் குப்பையில் கொட்டி, ரசாயண கலவை ஊற்றி அழிக்கப்பட்டது, அரசினால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தி ஒரு உணவகத்திற்கு ரூபாய் 2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பல உணவகங்களில் சமையல் கூடங்கள் சுகாதாரமாக பேணப்படவில்லை என்பதற்காக, முன்னச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது தொடர்ந்து மாதுளம்பேட்டை பகுதியில் பானி பூரி தயாராகும் உணவுக்கூடமும் ஆய்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது பேட்டி : சசிக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர், கும்பகோணம். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended