• முகப்பு
  • கடற்கரை திருவிழாவை முன்னிட்டு மூங்கில் இசைக்கருவியுடன் நாட்டுப்புற நடனம் மற்றும் இசை நிகழ?

கடற்கரை திருவிழாவை முன்னிட்டு மூங்கில் இசைக்கருவியுடன் நாட்டுப்புற நடனம் மற்றும் இசை நிகழ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் முதன் முதலாக கடற்கரை திருவிழா நடைபெறுகிறது. 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி... 2-ம் நாளான ராக் கடற்கரையில் பிரபல பின்னணி நாட்டுப்புற பாடகி இசைவானியின் இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுச்சேரி சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து 3-ம் நாளான 15ம் தேதி, கடற்கரை சாலை லே- கபே, குபேர் அவென்யூவில் மூங்கில் இசைக்கருவியின் இசை,நாட்டுப்புற இசை,நடனமும், பரதநாட்டியம், புல்லாங்குழல் வயலின், மிருதங்கம், மற்றும் தப்பாட்டம், உள்ளிட்ட இசைக்கருவிகள் இசையுடன் நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், மற்றும் கர்நாடிக் இசையுடன் பாடல்கள் பாடப்பட்டது .இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டுகளித்தனர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். #புதுச்சேரி #கடற்கரைதிருவிழா #மூங்கில்இசைக்கருவி #நாட்டுப்புறநடனம் #இசைநிகழ்ச்சி #பாண்டிச்சேரி #pondicherybeach #marinabeach #moviesongs #tginews #thegreatindianews #news #breakingtamilnews #latesttamilnews #todaytamilnews #headlinestoday #tamilnews #newstamil

VIDEOS

RELATED NEWS

Recommended