• முகப்பு
  • திருவாரூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் வெள்ளம்: பிரசவத்திற்கு வந்த தாய்மார்களும், பிரசவ??

திருவாரூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் வெள்ளம்: பிரசவத்திற்கு வந்த தாய்மார்களும், பிரசவ??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் நேற்று இரவு முதல் 3 அடி உயரத்திற்கு சூழ்ந்துள்ள வெள்ளத்தால் பிரசவத்திற்கு வந்த தாய்மார்களும், பிரசவித்த தாய்மார்கள் பச்சிளங்குழந்தையுடன் கட்டிலிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். திருவாரூர் விஜயுபரம் பகுதியில் அரசின் தாய்-சேய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை சுற்றியுள்ள கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமித்து குடியிருப்பு மனைகளாக்கப்பட்டதால் லேசமாக மழை பெய்தாலேயே தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலும், அப்பகுதி மக்களும் அரசின் கவனத்திற்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேற்று இரவு விடியவிடிய கொட்டி தீர்த்த கனமழையினை அடுத்து இம்மருத்துவமனையை சுற்றி 3 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. இதன்மூலம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு பகுதி, மருந்துகொடுக்கும் பகுதி, உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டு, குழந்தைகள் வார்டு, லேப் அறை என அனைத்து பகுதிகளும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வெள்ளநீரில் பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் கொண்ட பூச்சிகளும் மருத்துவமனையில் ஆங்காங்கே தஞ்சம் அடைந்துள்ளதால் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளங்குழந்தையுடன் தத்தம் படுக்கை கட்டிலிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். இதனிடையே பிரசவிக்க வந்த பெண்மணி ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரது உறவினர்கள் அவரை சக்கர நாற்காலி மூலமாக வெளியே கொண்டுவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். இனியாவது ஏழை எளிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மருத்துவமனையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended