• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொடியேற்று விழா.

ஸ்ரீமுஷ்ணத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொடியேற்று விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம் ஸ்ரீமுஷ்ணத்தில் விஜய் ரசிகர் மன்ற கடலூர் மாவட்ட தலைவர் ராஜசேகர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கொடியேற்றி இனிப்பு வழங்கினார் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் விஜய் ரசிகர் மன்ற கடலூர் மாவட்டத் தலைவர் ராஜசேகர் ஸ்ரீமுஷ்ணம் அதனை சுற்றியுள்ள குணமங்கலம் ஸ்ரீ புத்தூர் கார்மாங்குடி வள்ளியம் கீரமங்கலம் புளியங்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து அம்புஜவல்லி பேட்டை கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, ஒன்றிய தலைவர் முத்துவேல் செயலாளர் பாண்டியன் , பொருளாளர் மணிகண்டன் மற்றும் கிராமப் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மாவட்ட தலைவர் ராஜசேகரை சால்வை அணிவித்து வரவேற்றனர், சுமார் 5 மணி அளவில் மணிகண்டன் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது , அதோடு நலிந்தோர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended