Author: THE GREAT INDIA NEWS

Category:

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 7 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நிறைவடைந்த நிலையில், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி உத்தரபிரதேசம், மணிப்பூரில் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். கோவாவில் தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று காங்கிரஸ் கட்சி தங்க வைத்துள்ளது. இந்நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதனைத் தொடர்ந்து வாக்கு பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனிடையே வாரணாசி தொகுதியில் உரிய நெறிமுறைகளை பின்பற்றாமல் இவிஎம் எந்திரங்களை லாரியில் எடுத்துச் சென்ற வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினார். அதேபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறியதை கண்ட சமாவாடி கட்சியினர் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. பிரீத் இதற்கு விளக்கமளித்த வாரணாசி கமிஷனர், அந்த எந்திரங்கள் வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல என்று விளக்கமளித்தார். எனினும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Comments & Conversations - 0