• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா !!!

உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுமார் 700 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதால் அந்த கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்றத் தலைவருமான தங்க.ரமேஷ் இந்த ஏரியை மீன் பிடிப்பதற்காக ஏலம் விடப்படாது என அறிவித்தார். மீன் குத்தகை எடுப்பவர்கள் தண்ணீரை திறந்து விடுவதால் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்படுவதோடு விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் ஏரியில் அதிக அளவில் மீன்கள் இருந்துவரும் நிலையில் இந்த ஆண்டு மீன் ஏலம் விடாததால் பொதுமக்களே மீன்களைப் பிடித்துச் செல்லும் வகையில் இன்றைய தினம் மீன்பிடித் திருவிழா கொண்டாடப்படும் என கிராமத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அந்த ஏரியில் திரண்டு கச்சா கைவலை , சேலை ஆகியவற்றை கொண்டு கெண்டை, விரால், ஜிலேபி உட்பட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்துக் கொண்டு உற்சாகமாக வீடுகளுக்குச் சென்றனர். தொடர்ந்து இந்த மீன்பிடித் திருவிழா இன்று மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended