Author: மகேஷ் பாண்டியன்

Category: மாவட்டச் செய்தி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடவள்ளியில் அமைந்துள்ளது. அருள்மிகு மகா மாரியம்மன் கோவில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை 22-5-23 பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று 21-5-23 மதியம் வடவள்ளி கிராமத்தில் இருந்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர்வலமாக நடந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சிக்கு பவானி ஆற்றில் தீர்த்த குடம் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

தீர்த்த குடம் எடுத்து, மீண்டும் ஆலையத்திற்கு தீர்த்த குடம் எடுத்து செல்லும் போது பட்டாசுகள் வெடித்து வான வேடிக்கையுடன் ஊர்வலமாக செல்வதே வழக்கம்.

இதற்காக வடவள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பிக்கப் வேனில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு கெஞ்சனூர் அருகே அம்மன் கோயில் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, பிக்கப் வேனில் வைத்திருந்த பட்டாசு திடீரென்று வெடித்து சிதறியது.

இதில் பிக்கப் வேனில் இருந்த 15 க்கும் மேற்பட்ட இளைஞர்களில் ஒன்பது பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது, இதில் வடவள்ளி கிராமத்தை சேர்ந்த திவாகர் ,பூபாலன் ஆகிய இருவருக்கும் பலத்த காயமும் முத்தான், நரேஷ், கணேஷ், முத்துகுமார் ஆகிய நான்கு பேருக்கும் சிறிய தீக்காயங்களும் ஏற்பட்டது.

இத்தகவலை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த திவாகர் மற்றும் பூபாலன் ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

#erodenews, #erodenewstoday , #accident #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0