• முகப்பு
  • சினிமா
  • மன்னார்குடியில் திரைப்பட நடிகர் சரத்பாபுவுக்கு புகழஞ்சலி :

மன்னார்குடியில் திரைப்பட நடிகர் சரத்பாபுவுக்கு புகழஞ்சலி :

இளவரசன்

UPDATED: May 24, 2023, 3:12:42 AM

திரைப்பட நடிகரும், ஐயப்ப பக்தருமான சரத்பாபு (71) உடல் நலக் குறைவால் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மன்னார்குடி  திருவள்ளுவர் பொதுநல அமைப்பு மற்றும் அனைத்து சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டின்படி,  மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த சரத்பாபு உருவப் படத்திற்கு, மாலையணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்விற்கு, திருவள்ளுவர் பொதுநல அமைப்பு தலைவர் என். ராஜ்குமார் தலைமை வகித்தார்.

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் நெடுவை குணசேகரன் வடுகநாதன், பேராசிரியர் இருளப்பன், சமூக ஆர்வலர்கள் கோ.வாசுதேவன், வேல்முருகன், ராஜலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருவள்ளுவர் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் கவனித்தனர். நிறைவாக சரத்பாபுவின் உருவப்படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended