Author: ஆர்.தீனதயாளன்

Category: மாவட்டச் செய்தி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா விசித்திரராஜபுரம் கிராமத்தில் வசித்து வந்த பிரபாகரன் மனைவி கோகிலா ( வயது - 33) இவர் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார் ஒரு மகன் உள்ளார்.

கோகிலா கபிஸ்தலத்தில் வாட்ச் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடையில் அமர்ந்து கொண்டு செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு ஹெட்போனில் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென செல்போன் வெடித்து சிதறியது.

உடனே கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது.

கோகிலா பலத்த தீ காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர்.

இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:

#Thanjavurnewstoday , #cellphoneblast #Thanjavurnewspapertoday , #Thanjavurnewspaper, #Thanjavurnewschannel , #Thanjavurnewsupdate, #Thanjavurlatestnews, #Thanjavurnews , #Thanjavurnewstodaylive , #Thanjavurlatestnews, #papanasamnewstoday #papanasamnews #papanasam #latestnewsinthanjavur , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தஞ்சை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu ,,
Comments & Conversations - 0