• முகப்பு
  • தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினர் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத

தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினர் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி : எஸ்சி எஸ்டி சிறப்புக்கூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக செலவிடாத புதுச்சேரி அரசை கண்டித்தும் அனைத்து தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு சென்றதால் போலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு நடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்சி எஸ்டி சிறப்புக்கூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக செலவிடாத புதுச்சேரி அரசை கண்டித்தும், 2021ஆம் ஆண்டுக்கான சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிடவேண்டும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்பது சென்டாக்கில் தேர்வான மாணவர்கள் மட்டுமே என்று பாரபட்சம் காட்டக்கூடாது, நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக வந்து சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் சட்டப்பேரவை அருகே தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போராட்டகாரர்கள் தடைகள் மீது ஏரியும், தடைகளை தூக்கி எறிந்து சட்டப்பேரவை நோக்கி நகர்ந்தனர். அப்போது போலிசாருக்கும், போராட்டக்கார்ர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலிசார் வருக்கட்டாயமாக அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் இருந்து போலிசரை மீறி சென்ற ஒரு சிலர் சட்டப்பேரவை நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சட்டப்பேரவை காவலர்கள் சட்டப்பேரவை வாயில் கதவை இழுத்து மூடினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended