• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகையில் தந்தையின் நினைவு நாள் சோகம்; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

நாகையில் தந்தையின் நினைவு நாள் சோகம்; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

செ.சீனிவாசன்

UPDATED: May 20, 2023, 7:50:23 PM

நாகை மாவட்டம் காடம்பாடி புதிய நம்பியார் நகரைச் சேர்ந்தவர் கோபால்- இந்திரா தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 

மீன்பிடித் தொழிலில் வரும் வருமானத்தைக் கொண்டு சந் தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில்   சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் செயலிழந்தார்.

இதனால் அந்த குடும்பம் நிம்மதியை இழந்து வறுமை நோக்கி சென்றது. தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே கோபால் முடங்கியதால் இந்திரா மீன் விற்பனையில் தீவிரமாக இறங்கினார். அதில் வரும் குறைந்த வருமானத்தைக் கொண்டு அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், வருமானம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை துணையாக இருந்த கோபால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதில் மனமுடைந்து போன இந்திரா தனது  மகன் கௌதமன் மற்றும் மகள் குணாவதி ஆகியோருக்காக மனதை தேற்றிக்கொண்டு பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணி கடுமையாக உழைத்தார்.

மீன் விற்பனை செய்து தனது இரண்டு பிள்ளைகளும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தினசரி மீன் விற்பனை செய்து மூத்த மகனை சென்னையிலும் மகளை  நாகை நடராஜன் தமயந்நி மேல்நிலைப்பள்ளியிளும் 10 ம் வகுப்பு படித்து வந்தனர்.

ஆனால் விதி மீண்டும் இந்திரா விழாவில் விளையாடி மீளா துயரத்திற்கு அவரை ஆழ்த்தியுள்ளது ஏன்றே கூறலாம். நேற்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விற்கான முடிவுகள் வெளியானது.

இதில் குணவதி சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தள்ளார்.இருப்பினும்‌ கலங்கிய கண்களுடன் 

தனது தந்தை கோபால் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரித்து மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்திரா வழக்கம் போல மீன் வியாபாரத்திற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .மீன் விற்று முடித்து விட்டு வீட்டிற்கு வந்த இந்தியாவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.உடனடியாக அலறல் சத்தம் கேட்டு  அருகில் இருந்தவர் குணவதியை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோத்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை சம்பந்தமாக நாகை காவல்துறையினர் வழக்கு பதிவு உடலை  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தந்தை இழந்த மன உளைச்சல் மற்றும் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாகை மீனவ கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended