• முகப்பு
  • tamilnadu
  • விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மானியம் வழங்கப்படும்.!!

விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மானியம் வழங்கப்படும்.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேளாண்த் துறை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு பல புதிய முயற்சிகளை கொண்டு வந்துள்ளது. வேளாண் துணை இயக்குனரகம் மூலமாக இயந்திர மயமாக்கல் திட்டம் செயல்முறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கிஷான்டேரோன் திட்டம் மூலமாக மருந்து தெளிக்கும் ஆளில்லா விமானம் வழங்கப்பட உள்ளது. ஆளில்லா விமானத்தின் விலை ரூபாய் 5 லட்சம் வரை ஆகும், இதில் SC, ST பிரிவு விவசாயிகளுக்கு ரூபாய் 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும், மற்ற பிரிவினருக்கு 50% வரை மானியம் வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 9 நிமிடத்தில் 1 ஏக்கர் வரைமருந்து தெளிக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளதாகவும், ஆலோசணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல சில கட்டுப்பாடு விதிகளையும் அறிவித்துள்ளது. மின்கம்பி, இல்லாத விவசாய நிலம், மரங்கள் அடர்த்தியாக உள்ள நிலம், மேக மூட்டம் இல்லாத பருவநிலை மற்றும்,மக்கள் வசிக்கும் பகுதி நிலங்களுக்கு அனுமதி பெற வேண்டும். போன்ற கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் விவசாய பெருமக்கள் இது பற்றி தெரிவிக்கையில் கட்டுப்பாடுகளை பார்த்தால் முரண்பாடு உள்ளதாகவும் ஏற்புடையதாக இல்லை எனவும் உடனடியாக கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

RELATED NEWS

Recommended