• முகப்பு
  • விவசாயம்
  • பட்டா மற்றும் ஆவணங்களை பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்து சொல்லும் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

பட்டா மற்றும் ஆவணங்களை பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்து சொல்லும் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

முத்தையா

UPDATED: May 14, 2023, 6:11:09 PM

நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், புதுப்பட்டி ,பரளி, இலத்துவாடி ஆகிய கிராமங்களில் சுமார் 2500  ஏக்கர் பரப்பளவில்  சிப்காட்ருக்கு தமிழக அரசு நிலம் ஆக்ஸிஜம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை எதிர்த்து இப்பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களாக இதுவரை 10   க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும்  மீண்டும் நிலம் எடுப்பதில் தமிழக அரசு கவனமாக இருப்பதை இறுதியாக கண்டிக்கும் வகையில்,

இன்று 14.5.2023 தங்களின் நிலத்தின் பட்டா மற்றும் ஆவணங்களுக்கு இறுதி மரியாதை செய்து அதை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரித்து அதன் அஸ்தியை காவிரி ஆற்றில் கரைக்க  முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இதற்கும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள சிப்காட் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளதாக தமிழக விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் கே .பாலசுப்பிரமணியன்
கூறினார்.

வளையப்பட்டியில்  உள்ள காட்டுப்புத்தூர் மற்றும் மோகனூர் செல்லும் பாதையில் உள்ள முக்கு ரோட்டில் இன்று இறந்துவர்களுக்கு பாடை மாற்றுவது போல தங்கள் விவசாய நிலங்களை தமிழக அரசு சிப்காட்டு அமைப்பதற்காக
வலையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், புதுப்பட்டி ,பரளி, இலத்துவாடி

ஆகிய கிராமங்களில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் நிலம் எடுப்பதாக கூறுவது தங்களின் நிலங்களுக்கு உயிரை இழக்கும் நிலை ஏற்படும் என்பதை நினைவு கூறும் வகையில் இதுவரை நடத்தப்பட்ட 10 போராட்டங்களுக்கு மேலாக நடத்தியும் தமிழக அரசு விவசாயிகளை அழைத்து பேசவில்லை என்பதாலும் தொடர்ந்து,

இங்குள்ள திமுக மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் தொடர்ந்து நிலம் சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்படும் என்று கூறுவதெல்லாம் கவனத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நிலம் இதனால் இறந்துவிடும் என்று பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் தங்கள்  வாழ்வாதாரமும் முடிந்து விடும் என்பதை எடுத்துச் சொல்ல,

இந்த பாடை கட்டி தூக்கி செல்லும் நூதன போராட்டத்தில் தங்களின் நில பத்திரம் மற்றும் ஆவணங்களை பாடையில் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று   சுடு காட்டில் எரித்து ஈமச்சடங்கு செய்து காவேரி ஆற்றில் அந்த பத்திரங்களை ஆவணங்களை எரித்த  சாம்பலை (அஸ்த்தியை) காவிரி ஆற்று  நீரரில் கலக்குவது போன்ற நிகழ்வை  தத்துரூபமாக விவசாயிகள் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக விவசாய சங்க பொதுச் செயலாளர் விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இறந்தவருக்கு இறந்தவர் குடும்பத்திற்கு வரும் உறவினர்கள் பொதுமக்கள் கைப்பிடித்த இரங்கல் கேட்பது போல செய்தும் பெண்கள் கூடிருந்த பெண் விவசாயிகள் ஒப்பாரி வைத்தும் அந்த நிகழ்ச்சியை தத்துவமாக செய்து காட்டினார்கள்.

இதை அடுத்து பாடை கட்டப்பட்ட இந்த விவசாய நிலங்களில் பட்டா மற்றும் ஆவணங்களை அதில் வைத்து இந்த பாடையில் வைத்து இறந்தவர் போல இறுதி மரியாதை ஊர்வலம் நடத்தி நூதனமாக இந்த போராட்டத்தை இப்பகுதி விவசாயிகள் நடத்தினர்.

அதாவது சுமார் 10 சதுர கிலோ மீட்டர் தொலைவில் சிப்காட் அமைத்திட எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் 3 மணியளவில் மோகனூர் காட்டுபுத்தூர் பிரிவு ரோட்டில் இருந்து வளையப்பட்டி மயானம் வரை ஆவணங்கள் பாடை ஏற்றி எரிக்கும் போராட்டம் நடத்தினர். 

இறந்தவர்களை சுடுகாட்டுக்கு  இறுதி ஊர்வலமாக எடுத்து செல்வது போல பட்டாசு வெடித்து தூக்கி விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.

அருகில் இருந்த ஓடை அருகே உள்ள சுடுகாட்டில் அந்த ஆவனங்களை பட்டார்கள் (நகல்) எரித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended