Author: கோபிநாத்

Category: விவசாயம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது  இதில் கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டிஆர்ஓ லதா, திட்ட அதிகாரி திலகவதி, விவசாயி வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில் ஆட்சியர் பூங்கொடி பேசியதாவது:

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் என்பது விவசாயிகளுடைய கோரிக்கைகளை கூறகூடியது. உங்கள் கோரிக்கைகளை வாய் மூலம் தெரிவித்தது முக்கியமில்லை இதை மனுக்களாக கொடுங்கள்.

அப்போதுதான் நாங்கள் அதிகாரிகளிடம் கேட்க முடியும். அந்த மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று அதனால் விவசாயிகள் உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எங்களிடம் அளிக்க வேண்டும், என்றார்.

விவசாயிகள் தெரிவித்ததாவது :

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆறுகள், குளங்களில் மண் மண் தொடர்ந்து அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் அழியும் நிலையில் உள்ளது.

மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மேலும் ஒரு நடைக்கு ரூ. 700 சீட்டு போட்டு மண் அள்ளுகிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன, இதற்கு தனி அதிகாரிகளை நியமித்து நிலங்களை மீட்க வேண்டும்.

நிலக்கோட்டை பகுதியில் மாம்பழ குடோன்களால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மாசுபட்டு உள்ளது. அந்த நிறுவனத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும். தங்கமாபட்டி குளத்தை தூர் வார வேண்டும்.

இதேபோல மாங்கரை ஆற்றில் அக்கிரமிப்பு அதிகம் உள்ளதா அவற்றை அகற்றி தண்ணீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருங்கைப் பொடிகள் ஏற்றுமதி நடக்கிறது விவசாயிகள் இணைந்து முருங்கை ஏற்றுமதி தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் பல இடங்களில் ரோடு வசதி மிக மோசமாக உள்ளது. அவற்றை அதிகாரிகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் பஸ் ஸ்டாப் காணாமல் போய்விட்டது. மீண்டும் வைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரம் பகுதி அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. புகார் செய்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை, என்றனர்.

கலெக்டர் பூங்கொடி: மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் 94987 94987 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் செய்தால் அதிகாரிகள் உடனுக்கு நடவடிக்கை எடுப்பார்கள், என்றார்.

Tags:

#dindigulnews , #dindigulnewsintamil , #dindigulnewslive , #dindigulnewstoday , #dindigulnewstodaytamil , #dindigulnewspapertoday , #இன்றையசெய்திகள்திண்டுக்கல் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigaldindigultamilnadu , #todaynewstamilnadu , #thegreatindianews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #dindigultodaynews , #dindigullatestnews , #dindigulnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #latestnewsindindigul
Comments & Conversations - 0