• முகப்பு
  • district
  • கத்தரிக்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை!!

கத்தரிக்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்ததால் உரிய விலை இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, டி.புதூர், மூணாண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி பகுதியில் இறவை பாசனத்தில் கத்தரிக்காய் சாகுபடி உள்ளது. இரு மாதத்திற்கு முன் கிராக்கி இருந்ததால் விவசாயிகள் பலரும் கத்தரி நடவு செய்தனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. தினமும் இப்பகுதியில் இருந்து மூன்று டன் கத்தரிக்காய் விற்பனைக்கு செல்கிறது. ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கூறியதாவது: ஆண்டு முழுவதும் இப்பகுதியில் காய்கறி சாகுபடி உள்ளது. இரு மாதத்திற்கு முன் கத்தரிக்காய்க்கு கிலோ ரூ. 40 விலை கிடைத்தது. கத்தரி சாகுபடியில் உரம், மருந்து செலவுகள் அதிகம். ஏக்கருக்கு 1.5 டன் விளைச்சல் கிடைக்கும். தற்போது விளைச்சல் அதிகரித்ததால் கிலோ ரூ.10 முதல் 15 வரை விலை கிடைக்கிறது. எடுப்பு கூலி, போக்குவரத்து கணக்கிட்டால் லாபம் இல்லை. முகூர்த்த சீசனில் கத்தரிக்கு மீண்டும் கிராக்கி ஏற்படும் என்றார். தேனி மாவட்ட செய்தியாளர் ஜீவா.

VIDEOS

RELATED NEWS

Recommended