• முகப்பு
  • chennai
  • நாளை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது!

நாளை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாளை 13.5.2022 காலை 10 மணி முதல் 1 மணி வரை சென்னையில் உள்ள 19 மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அனைவரும் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளலாம். அடையாள ஆவணமாகவும் முகவரிசான்றிதழாகவும் ரேஷன்கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது . அது மட்டுமில்லை அரசுசார்பில் வழங்கப் படும் நிதியுதவி, அரசின் நலத் திட்டங்களை பெறவும் ரேஷன்கார்டு மிகமிக அவசியம். புதியதாகதிருமணம் ஆனவர்கள் கணவரின்பெயர் அல்லது மனைவியின் பெயரை ரேஷன்கார்டில் சேர்க்கமறந்து விடாதீர்கள். அதே போல் குடும்பத்தில் புதியதாக உறுப்பினர்சேர்ந்தாலோ அவர்களின்பெயரையும் கட்டாயம் கார்டில்சேர்க்க வேண்டும். புதியதாகதிருமணம் ஆனவர்கள் ஒருவேளை தனிவீட்டில் இருந்தால், அவர்கள் ஏற்கனவே தனது குடும்பத்துடன் ரேஷன்கார்டில் இருக்கும் பெயரை நீக்கம்செய்து விட்டுதான் புதியகார்டில் பெயரை சேர்க்கமுடியும். அது மட்டுமில்லை இதற்கு ஆதார்திருத்தமும் மிகமிக முக்கியம். தற்போது இருக்கும் முகவரிக்கு ஆதார்கார்டு முகவரியை திருத்தம் செய்து விட்டு புதியரேஷன் கார்டுக்கு அப்ளைசெய்ய வேண்டும். ஒரு வேளை குழந்தைபிறந்தால், அந்த குழந்தைக்கு ஆதார்கார்டு வாங்விட்டு அதன்மூலம் குழந்தையின் பெயரையும் ரேஷன்கார்டில் இணைக்கலாம். இதைஎல்லாம் செய்யதவறினால், அரசுமூலம் கிடைக்கும் நலத் திட்டங்களை நீங்கள் பெறுவதுசிக்கலாகி விடும்.ரேஷன்பொருட்களும் கிடைக்காது. ஆன்லைனிலும் இதைசெய்யலாம்: 1. ரேஷன் கார்டில்புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முதலில் உங்கள்மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ https://tnpds.gov.in/ இணையதளத்திற்குச்செல்ல வேண்டும். 2. வலதுபுறத்தில் இருக்கும் புதிய உறுப்பினர்களைசேர்த்தல் என்பதைகிளிக் செய்யவேண்டும். 3. அங்கு உங்களுடைய மொபைல்எண் மற்றும் அங்குதோன்றும் கேப்சாகுறீயீடுகளை பதிவுசெய்து உள்நுழைய வேண்டும். 3. அதில் ரேஷன்கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குதேவையான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும். 4. இறுதியாக ஓடிபிசரிபார்க்கப்பட்டு உங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் தி கிரேட் இந்தியா நியூஸுடன். செய்தியாளர்: பா. க. ஸ்ரீதேவி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended