Author: Entertainment

Category:

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? கணவன்: பருப்பும் சாதமும். மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம். கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல். மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது. கணவன்: முட்டைப் பொரியல்? மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை. கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான். கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா? மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும். கணவன்: மோர் குழம்பு? மனைவி: வீட்ல மோர் இல்ல. கணவன்: இட்லி சாம்பார்? மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும். கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம். மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும். கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே? மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது🙄

Tags:

Comments & Conversations - 0