• முகப்பு
  • விளையாட்டு
  • இளமையிலேயே அனைவரும் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்: அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு !

இளமையிலேயே அனைவரும் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்: அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு !

வாசுதேவன்

UPDATED: May 29, 2023, 1:44:24 PM

இளமையிலேயே அனைவரும் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்று வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு பேசினார்.

வேலூர் மாவட்டம் , காட்பாடியில் செங்குட்டை சமுதாய நலக் கூடத்தில் ஒகினவா கோசிகி கோஜிரியூ கராத்தே டூ , செய்டோ சகமோடோ ஷி ரேகன் - இந்தியா, கேஒய்யூ கிரேடிங் தேர்வு காட்பாடி கிளை சார்பில் கராத்தே பயிற்சியில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை என பல வண்ணங்களில் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டன.

அத்துடன் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட 30 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 30 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் பெல்ட்டுகளை வழங்கி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆர். கே .அப்பு பேசியது:

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டையில் தினமும் அதிகாலை 6:00 மணி முதல் 8 மணி வரை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கராத்தே பயிற்சியை அளித்து வருகிறார் கராத்தே மாஸ்டர் அமுதா. தினமும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் .

தேனியை விட மிகவும் சுறுசுறுப்பாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் .அத்துடன் நிற்காமல் அவர் பிற பணிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அவரது கணவர் அச்சுதானந்தம் உறுதுணையாக இருந்து செயல்படுகிறார்.

இப்படி மாணவ, மாணவிகளுக்கு இளமையிலேயே கராத்தே பயிற்சியை கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது. இந்த தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொள்வதால் நாம் எந்த நேரத்திலும் பயம் இன்றி வீட்டை விட்டு வெளியில் செல்லலாம், வரலாம் என்ற நிலை அனைவருக்கும் ஏற்பட ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆதலால் கராத்தே பயிற்சியை கற்றுக் கொள்ளாத மாணவ, மாணவிகள் கட்டாயம் இன்றிலிருந்து கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இந்த கராத்தே பயிற்சியை கற்றுக் கொள்வதால் உடலும், மனமும் அமைதியாக இருக்கும். கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால் கல்வியுடன் மாணவ, மாணவிகள் இது போன்ற தற்காப்பு பயிற்சிகளையும் கட்டாயம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் சிறந்தவர்களாக உயர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெற்றார் எஸ். ஆர். கே. அப்பு.

இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற மாணவர்களின் கராத்தே செயல் விளக்கங்கள் பார்வையாளர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. கராத்தே பயிற்சி முடித்தவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவுக்கு செங்குட்டை பகுதி நாட்டாண்மை பாண்டியன் தலைமை வகித்தார்.

4வது வார்டு திமுக கவுன்சிலர் லோகநாதன், சிலம்ப மாஸ்டர்கள் ஜெயவேல், கருணாகரன், வழக்குரைஞர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை கராத்தே மாஸ்டர் அமுதா வரவேற்றார்.

இந்த விழாவில் சென்னை கராத்தே மாஸ்டர் கோபி மற்றும் மாஸ்டர்கள் அஸ்வினி, நித்தியா மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த சான்றிதழ் வழங்குதல் மற்றும் பெல்ட் வழங்கும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதானந்தம் சிறப்பாக செய்திருந்தார். விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் தேநீர் விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.

இறுதியில் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் கராத்தே மாஸ்டர் அமுதா நன்றி கூறினார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended