• முகப்பு
  • அரசியல்
  • சீமான் கிறிஸ்தவத்தை ஆதரித்தாலும் அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.

சீமான் கிறிஸ்தவத்தை ஆதரித்தாலும் அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.

இளவரசன்

UPDATED: May 21, 2023, 8:37:54 AM

திருவாரூர் மாவட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் விக்டர் வினோத் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் தேசிய தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வனிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தேசியத் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் இங்கு ஏராளமான திருச்சபைகள் இருந்து வருகின்றன.

ஆனால் தேசத் துரோகிகளால் திருச்சபைகளுக்கும் மத போதகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்படுகின்ற திருச்சபைகளுக்கு அரசு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை.மதவாதிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக விடுமுறை வேதாகம பள்ளி நடந்து கொண்டிருக்கிற பல இடங்களில் இந்த மதவாதிகள் நுழைந்து அங்கு போதகர்களை தாக்கி சிறு குழந்தைகளை தாக்கி கிறிஸ்தவம் இங்கு இல்லாத நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பு இங்கு குறைந்து கொண்டே வருகிறது..

இந்த நிலை தொடர்ந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் தனித்து களம் காணும்.மேலும் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இது முடிந்தவுடன் மற்ற பணிகள் தொடரும்.40 தொகுதி தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்.கிறிஸ்தவ ஆதரவு நிலைப்பாட்டை சீமான் எடுத்தாலும் நாம் தமிழர் கட்சியிலும் சிறுபான்மை பிரிவு இருக்கிறது ஆகையால் தனித்து நின்றால் மட்டும்தான் நாங்கள் யார் என்று காட்ட முடியும் என்று கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended