Author: மகேஷ் பாண்டியன்
Category: மாவட்டச் செய்தி
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா வனக்கிராமத்தில் வாழும் ஆதிவாசிகள் அல்லாத 495 குடும்பத்தினரை பவானிசாகரில் மறுகுடியமர்வு செய்ய ஈரோடு மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்காக பவானிசாகரில் வருவாய் நிலங்கள் ஒதுக்கீடு செய்து ஒரு குடுமபத்துக்கு இரண்டரை சென்ட் வீட்டுமனை மற்றும் ரூ15 லட்சம் ரொக்கம் ஆகியவை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவபடி தெங்குமரஹாடா பண்ணை கூட்டுறவு சங்கம் மற்றும் தெங்குமரஹாடா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் என இரு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை மறுகுடியமர்வு குறித்து சிறப்பு பொது பேரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தெங்குமரஹாடா பண்ணை கூட்டுறவு சங்கத்தில் உள்ள 141 உறுப்பினர்கள் மறுகுடியமர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றனர்.
ஆனால் தெங்குமரஹாடா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தில் பெரும்பாலானோர் மறுகுடியர்வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதில் அல்லிமாயாறு, தெங்குமரஹாடா, சித்தராம்பட்டி கல்லாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மறுகுடியமர்வு குறித்து செயலாட்சியர் ஆனந்தன் முன்னிலையில் கருத்து கேட்டகப்பட்டது.
பெரும்பாலன மக்கள் மறுகுடியமர்வுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள் மறுகுடியமர்வுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தால் ஆத்திரமடைந்த மக்கள், செயலாட்சியர் ஆனந்தன் அலுவல அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags:
#erodenews, #erodenewstoday , #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்