முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை நீக்குமாறு வலியுறுத்தல்

பதுளை - எம். கே. எம். நியார்

UPDATED: May 31, 2023, 5:26:52 PM

இம்முறை க.பொ.தரம் ( சா/தர) பரீட்சைக்கு பதுளை மத்திய மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் (பரீட்சை நிலைய எண் 2770) தோற்றிய முஸ்லிம் பெண் மாணவியரின் fபர்தாவை அகற்றுமாறு பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது சமய நல்லிணக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதுடன் ஒற்றுமையாக வாழும் சமூகங்களுக்கிடையே இது போன்ற சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அதுவும் கற்றவர்கள் இது போன்று நடப்பதை அனுமதிக்க முடியாது.

 மேலும், பரீட்சை திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பில் பரீட்சைகளின் போது மாணவர்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர திணைக்களத்தின் தேவைக்கேற்ப அல்ல என கெளரவ ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்ட விடயம் இங்கு குறிப்பிட்டத் தக்கது.

இவ்விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பரீட்சை ஆணையருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

 

 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended