சொத்துவரி உயர்வு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமலுக்கு வந்ததுசொத்து வரி! கோவை: அனைத்து தரப்பினரின் எதிர்ப்புக்கும் மத்தியில், சொத்துவரி செலுத்தும் நடை முறை நேற்று முதல் அமலுக்குவந்தது. நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி கேட்பு தொகையை இணையதளம் வாயிலாகவும், வரிவசூல் மையங்களிலும், அனைத்து தரப்பினரும் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் சொத்துவரி அபரிமிதமாக உயர்த்தப் பட்டது. அதிகமாக இருப்பதாக பொதுமக்கள், தொழில் துறையினர் என அனைத்துத்தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். வரியைக்குறைக்குமாறு கோரிக்கை விடுத்தும், அரசு தரப்பிலிருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இதனால், சொத்துவரியை ஏ, பி, சி, டி என நான்கு ஜோன்களாக வகைப்படுத்தி, கம்ப்யூட்டர் மென் பொருளில் மாற்றம் செய்து, உயர்த்தப்பட்ட சொத்துவரி விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில், மாநகராட்சி வருவாய் பிரிவினர் ஈடுபட்டனர். கடந்த ஏப்.,1 முதல்சொத்து வரி பொதுச் சீராய்வு பணிகள் நடந்து வந்ததால், நடப்பு, 2022 - 23 ஆம் நிதியாண்டுக்கான சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்தமுடியாத நிலை இருந்தது. பணிகள் முடிந்ததையடுத்து, நேற்றுமுதல் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரியை, அனைத்து தரப்பினரும் செலுத்தி வருகின்றனர். அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களிலும் மாலை, 4:00 மணி வரையும், இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended