சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 17, 2023, 6:53:38 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, கடம்பூர, பவானிசாகர் உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடந்து சென்று யானைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. நாளை நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும், நாளை மறுநாள் நீர் நிலைகளில் யானைகள் கணக்கெடுப்பும் நடைபெறுகின்றது. 

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி, வனவர் வெங்கடேஷ் மற்றும் வன வேட்டை தடுப்பு காவலர், தன்னார்வலர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன்ப்பகுதிக்குள் மொத்தம் 300 பேர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு தென்னிந்தியா முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற கணக்கெடுப்பில் 877 யானைகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டது. அதன் பிறகு இன்று துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended