Author: மாமுஜெயக்குமார்

Category: கல்வி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐக்கிய ஜமாஅத், ராமநாதபுரம் எகனாமிக் சேம்பர் இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு பேராசிரிய பெருமக்கள் வழியாக கவுன்சிலிங் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக தொண்டி புதுப்பள்ளிவாசல் ஆலிம் மௌலவி. இம்தாதுல்லாஹ் காஷிஃபி கல்வியின் பயன் பற்றிய குர்ஆன் வசனங்கள் கிராஅத் ஓதி அதற்கு தமிழில் பொருள் கூறினார். நிகழ்ச்சிக்கு,தொண்டி ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹிப்பத்துல்லாஹ் தலைமை தாங்கினார். 

தொண்டி வடக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், தெற்குத் தெரு ஜமாஅத் பொருளாளர் ஹாஜா அலாவுதீன், கல்வியாளர்கள், ஜமாஅத்தார்கள், இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா அனைவரையும் வரவேற்றார். 

தொண்டி கடற்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி. கௌஸுல் ஜமால் காஷிஃபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்த், முன்னாள் செயல் அலுவலர் செய்யது அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக ராமநாதபுரம் எக்னாமிக் சேம்பர் பற்றி அறிமுக உரையை பேராசிரியர் ஜமீர் அலி விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவியர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது பற்றிய பல்வேறு துறை சார்ந்த நான்கு பேராசிரிய பெருமக்கள் விளக்கம் அளித்தனர் .

அதில் உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர் முஹம்மது அப்துல்லாஹ் விளக்கம் அளித்தார்.

ஆசிரியப்பணி, அரசுப்பள்ளிகள் பற்றி பேராசிரியர் சுல்தான் விளக்கமளித்தார்.

மருத்துவம், துணை மருத்துவம் பொறியியல் கல்வி சம்பந்தமாக பேராசிரியர் சுல்தான் விளக்கமளித்தார்.

மாணவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேராசிரியர் தௌஃபீக் ரஹ்மான் மாணாக்கர்களின் சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் பதில் அளித்தார்.

+2 தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 548 மதிப்பெண் பெற்ற ஹசீனா பர்வின், இரண்டாவதாக 543 மதிப்பெண் பெற்ற மெர்ஸி, மூன்றாவதாக 521 மதிப்பெண் பெற்ற மகி ஸ்ரீ, அதே போல்

செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவதாக 535 மதிப்பெண் பெற்ற அப்துல்லாஹ், இரண்டாவதாக 489 மதிப்பெண் பெற்ற அப்துல் ரஹீம், மூன்றாவதாக 486 மதிப்பெண் பெற்ற அப்துல் ஹக்கீம், அமீர் சுல்தான், அகாடமியில் முதலாவதாக 584 மதிப்பெண் பெற்ற முஹம்மது ஃபரீக், இரண்டாவதாக 530 மதிப்பெண் பெற்ற ஈஸ்வர், மூன்றாவதாக 503 மதிப்பெண் பெற்ற புவனேஸ்வரன் ,

இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முதலாவதாக 556 மதிப்பெண் பெற்ற சில்மியா ரூஹி, இரண்டாவதாக 555 மதிப்பெண் பெற்ற ஷமிஹா பானு, மூன்றாவதாக 538 மதிப்பெண் பெற்ற அல்பியா நஸ்ரின், அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முதலாவதாக 582 மதிப்பெண் பெற்ற ரீஷ்மன் பேகம், இரண்டாவதாக 574 மதிப்பெண் பெற்ற நஷிஹா, மூன்றாவதாக 573 மதிப்பெண் பெற்ற ஆப்ரின் ஷிபானா, 

முனவ்வரா நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி நூர் மஜிதினா மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.       

தேர்வில் தேர்வு எழுதிய வெற்றி பெற்றால் நான்கு ஆண்டுகளுக்கு 12 ம் வகுப்பு வரை வருடத்திற்கு ரூ12 ஆயிரம் வீதம் ரூ 48 ஆயிரம் அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. இதில் வெற்றி பெற்ற இம்மாணவியை பாராட்டி இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டது.

கமாலியா மகளிர் அரபிக் கல்லூரியில் முதலாவதாக 466 மதிப்பெண் பெற்றவருக்கும் மேற்கண்ட 17 மாணவர், மாணவியர்களையும் , பாராட்டி கேடயங்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.

தொண்டியின் கல்வி நிறுவனங்கலான

தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 

செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 

அமீர் சுல்தான் அகாடமி, 

இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,  

அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 

முனவ்வரா நடுநிலைப்பள்ளி, 

கமாலியா மகளிர் அரபிக் கல்லூரி ஆகிய ஏழு கல்வி நிறுவனங்களையும் பாராட்டி கேடயங்களை திருவாடானை வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஃபைவ் ஸ்டார் அயூப்கான், ஓடாவி தெரு தலைவர் அப்துல் ரவூப், நம்புதாளை கிழக்குத் தெரு தலைவர் சேகு தாவூது மரைக்காயர்,

ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், ஆர்இசி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஜமாஅத்தார்கள் வழங்கினார்கள்.

தொண்டி ஐக்கிய நலக் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆபித் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்வில் மாணவர், மாணவியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொண்டி ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் முஹம்மது ஃபாரூக் நன்றி கூறினார்.

Tags:

#Ramanathapuramnews, #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0