• முகப்பு
  • அரசியல்
  • நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் மறியல்

நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் மறியல்

செ.சீனிவாசன்

UPDATED: May 22, 2023, 9:31:01 AM

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கீழவெளி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 1 மாதமாக வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் சிக்கல் கடைத்தெருவில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, கீழ்வேளூர் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாத்ததில் ஈடுப்பட்டனர். 

பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது. இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended