Author: மகேஷ் பாண்டியன்

Category: வானிலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று 26ம் தேதி மதியம் முதல் பெய்த மழையின் காரணமாக, கடம்பூர் அடுத்துள்ள குரும்பூர் பிரிவில் உள்ள சர்க்கரை பள்ளம் என்ற இடத்தில் செல்லும் பெரிய ஓடையில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.  

மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் இந்த சக்கரை பள்ளத்தின் வழியாக தான் செல்வது வழக்கம். திடீரென பெய்த கனமழையின் காரணமாக சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

இதனால் கரையின் மறுபுறம் உள்ள கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.

இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வெள்ள நீரை கடக்க முடியாததால், குழுவாக சேர்ந்து, வாகனத்தை கையில் தூக்கியவாறு தண்ணீரில் எடுத்துச் சென்று, மறு கரையை அடைந்து, அதன் பிறகு ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சக்கரை பள்ளத்தில் அடிக்கடி வெள்ள நீர் வருவதால், பாலம் அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:

#erodenews, #erodenewstoday , #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0