Author: மாரிமுத்து

Category: குற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து போதைப் பொருட்கள், பீடி இலை போன்ற பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு மற்றும் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் கடலோர காவல் படை மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் தலைமை காவலர் மாணிக்கராஜ் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு கடற்கரைப் பகுதியில் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது காவல்துறையினரை பார்த்தவுடன் வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ஒருவர் மட்டும் காவல்துறையினர் வசம் மாட்டிக் கொண்டார் அவர் வேன் டிரைவர் என்பது தெரியவந்தது பின்பு காவல்துறையினர் வேனன சோதனை செய்தபோது வேனில் 25 கிலோ எடை கொண்ட பிடி இலை மூடை இருந்தது மொத்தம் 56 பீடி இலை மூடைகள் இருந்தது மொத்தம் 1400 கிலோ பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் ஆகும் வேன் டிரைவர் கிருஷ்ணராஜபுரம் எட்டாவது தெருவை சேர்ந்த சார்லஸ் என்பவர் கைது செய்யப்பட்டு வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக டவுன் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #smuggling #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0