• முகப்பு
  • crime
  • கிராம சபையில் கேள்வி கேட்டதற்காக ஒரு குடும்பத்திற்க குடிநீர் இணைப்பு மறுப்பு!

கிராம சபையில் கேள்வி கேட்டதற்காக ஒரு குடும்பத்திற்க குடிநீர் இணைப்பு மறுப்பு!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரை : சமூக ஆர்வலர் ஆனந்தி (தேசிய மக்கள் பாதுகாப்பு கழகம்) கூறுகையில்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரை கிராம சபையில் கேள்வி கேட்டதற்காக ஒரு குடும்பத்திற்கு மட்டும் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு தர மறுக்கிறார். இது விஷயமாக முதலமைச்சர் வரை புகார் சென்றுவிட்டது ஆனால் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சில அரசு அதிகாரிகள் புகாரை விசாரிக்காமலேயே இவர்கள் ஏதாவது காரணம் சொல்லி மேலதிகாரிகளுக்கு பிரச்சனை தீர்க்கப்பட்டது என பதிலளித்து விடுகிறார்கள். அடிப்படைத் தேவை அந்தப் பகுதிக்கு வேண்டும் என அந்தப் பெண் ஒருவராக நின்று போராடினார் , இந்தப் பகுதியில் தெரு விளக்கு ரோடு வசதி போன்று எதுவும் இல்லை. இதே பெண்மணியை அந்தப் பகுதியில் தெரு விளக்கு இல்லாத காரணத்தினால் பாம்பு கடித்து ஒரு வாரகாலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இது எல்லாம் மனித உரிமை மீறல் ஆகும். கிராம சபையில் அரசு விதித்த விதி முறைப்படி சரியாக நடந்து கொள்ளுங்கள் தீர்மானங்களை ஒழுங்கான முறையில் பதிவேற்றங்கள் என கேட்டதற்காக, இப்படி ஒருவரின் அடிப்படை தேவையை கொடுக்காமல் இருப்பது தவறு என , 25-04-2022 அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அமைதியான முறையில் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு எதிர்ப்பை தெரிவித்தோம். இன்று 26-04-2022 அகிம்சை முறையில் எதிர்ப்பை தெரிவித்து அதன் பலனாக இன்று காலை அவர் வீட்டிற்கே வந்து குடிநீர் குழாய் இணைப்பு அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,இன்றைய செய்திகள் மதுரை தமிழ்நாடு,இன்றைய செய்திகள் மதுரை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,tamil news live tv,latest news in tamilnadu tamil,tamil news channel,tamil news flash,tamil news daily,Madurai latest news,madurai news tamil,madurai news live,breaking news tamil,Denial of drinking water connection to a family for questioning in the village council

VIDEOS

RELATED NEWS

Recommended