• முகப்பு
  • அரசியல்
  • திராவிட மாடல் அரசின இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

திராவிட மாடல் அரசின இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

சுரேஷ்பாபு

UPDATED: May 12, 2023, 7:38:18 PM

திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் திமுக ஆட்சியில் தான் மக்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள் என்றும்,

மப்பீடு பகுதியானது தரம் வாய்ந்த பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கிட்டதட்ட 2000 கோடி கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு செலவிடப்பட்டுள்ளது என்றும் தொடர்ச்சியாக மிகப்பெரிய சாலையானது மப்பேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து மொப்பீடு முன்மாதிரியாக மாறி வருகிறது என்றும் அவர் பெருமிதமாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் கொரோனா காலத்தில் முதலமைச்சர் தன் உயிரின் துச்சமாக நினைத்து மக்களுக்காக பணியாற்றிய தலைவர் என்றும்  தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மு ரமேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் இரண்டு ஆண்டு சாதனை குறித்து துண்டு பிரசுரங்களை கூட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திருத்தணி எஸ் சந்திரன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம் பூபதி மாவட்ட அவை தலைவர் கே .திராவிட பக்தன் மாநில துணைச் செயலாளர் ஆதிசேஷன் மாநில பயிற்சியாளர் குருதாஸ் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended