• முகப்பு
  • pondichery
  • ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திரௌபதி முர்மு கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திரௌபதி முர்மு கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்க்காக வருகிற 18-ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திரௌபதி முர்முவும்,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்காவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரான திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவைத் திரட்டி வருகிறார். அதன்படி புதுச்சேரி தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு தனி விமான மூலம் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன் விமான நிலையத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி, ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக தலைவர் சாமிநாதன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரளிதரன், செல்வகணபதி, தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் என 37 பேர் மட்டுமே இதில் பங்கேற்றனர். மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வருகை ஒட்டி தனியார் ஓட்டலில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கூட்டம் நடைபெற்ற அரங்கிற்குள் பத்திரிக்கையாளர்கள் ஐந்து நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை, க்ஷஹோட்டலில் ஊழியர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை அதோபோன்று பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாகிகள் உடனான கூட்டத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended