• முகப்பு
  • pondichery
  • புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உயர்ந்த தொழில் நுட்பத்தில் தரமான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுவதாக டாக்டர் ரகுவீர் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உயர்ந்த தொழில் நுட்பத்தில் தரமான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுவதாக டாக்டர் ரகுவீர் தெரிவித்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநில அளவிலான 20-வது கருத்தரங்கம் புதுச்சேரி அடுத்த ஓஷேன் ஸ்பிரே ஹோட்டலில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை பற்றி அடிப்படை முதல் உயர் தரமான தொழில்நுட்பம் வரை அனைத்து வகையான மருத்துவ தொழில்நுட்ப முறைகளையும், அறுவைசிகிச்சையின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளையும் மிகத் துல்லியமாக இந்த கருத்தரங்கில் எடுத்து கூறப்பட்டது. மேலும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மருத்துவத்துறையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது கையாள வேண்டிய நடைமுறைகள், அதில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பது பற்றியும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரகுவீர் கூறும்போது.. மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது குறிப்பாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது பல முறைகள் கையாளப்படுகிறது குறிப்பாக தீக்காயத்தால் ஏற்படும் இழப்பு, விபத்து, தொழுநோயாளிகள்,புற்றுநோய் நோயாளிகள் ஆகியோர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் என பல்வேறு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதில் அடிப்படை சிகிச்சை முதல் உயர்ந்த தொழில்நுட்பங்கள் வரை அனைத்தும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு புதுச்சேரியில் இருந்து 200 மருத்துவர்கள் மற்றும் முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களும் பங்கேற்றனர் என்று தெரிவித்த டாக்டர் ரகுவீர் அழகுக்கான அறுவை சிகிச்சைகளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படுகிறது ஒரு சில நேரங்களில் பக்க விளைவுகள் இருந்தாலும் ஆனால் மிக சிறந்த ஒரு பலனை இந்த சிகிச்சை அளிக்கிறது என்றார். அரசு மருத்துவமனைகளில் இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை கட்டணம் இல்லாமல் இலவசமாக செய்யப்படுகிறது அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நவீன உபகரணங்களோடு சிகிச்சைகளும் செய்யப்படுகிறது என்று தெரிவித்த அவர் பொதுமக்கள் இதுபோன்ற சிகிச்சைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பேட்டி; டாக்டர் ரகுவீர், அரசு பொது மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் புதுச்சேரி,

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended