Author: THE GREAT INDIA NEWS

Category: political

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது . பழைய காவல் நிலையத்தில் அவரது உருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர், பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர் இதனைத்தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கல்வெட்டு வைத்து கொடியேற்றி திறப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் புடவை வேஷ்டி சுமார் 100 பேருக்கு மேல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிழக்கு ஒன்றியம் அனைத்து ஊராட்சிகளிலும் கொடிக்கம்பம் அமைத்து கல்வெட்டுகள் பதிக்கப்பட்டது . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன , மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது மற்றும் கிராமங்களில் ஒவ்வொரு நபர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டன . பள்ளி மாணவ மாணவிகளை வைத்து புகையிலை ஒழிப்பு தினம் புகையிலை ஒழிப்பு , நெகிழி ஒழிப்பு பேரணி நடைபெற்றது . உடன் நகர சொசைட்டி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி செயலாளர் செல்வக்குமார் , சுப்பிரமணி மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம் இளைஞரணி வீரவேல் பூவராக மூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0