Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

வாழ்வில் ஒருசில நேரங்களில் நமது கர்மாவின்பலனாக சிலவற்றை அனுபவித்து தான் தீரவேண்டும் என்ற நிலை வரும் பொழுது, சோதனைகள்சூழ்ந்த சூழ்நிலையில்.., நமக்கெந்த ஆறுதலும் இல்லாதநேரத்தில் அழுகை மட்டுமே ஆதரவாக இருக்கும். அந்த நேரங்களில் அழுதுவிட்டால் நன்றாக இருக்கும் என்றுதோன்றும். ஆனால் சமுதாயத்திற்காகவும் மற்றவர்களுக்காகவும் அதை அடக்கமுயற்சி செய்கிறோம். குழந்தைகளையும் அழக் கூடாது. அது ஒரு மகாகுற்றம் என்பது போல அவர்களையும் அழுகையை அடக்கசொல்லி வளர்க்கிறோம். எந்த ஒன்றை நாம் அடக்கமுயற்சிக்கிறோமோ அது பல மடங்கு சக்தியுடன் அதிக ஆக்ரோஷமாக வெளி வரும் என்பதை மறந்து விடாதீர்கள் . அழுகையை அடக்க வேண்டாம். அழுது விடுங்கள். ஆனால் எதிரிகளுக்கு முன்னால் அழவேண்டாம். அழுது கொண்டயில்லாமல் கடந்த காலங்களை மறந்துவிட்டு துணிவுடன் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். இதில் மட்டும் தெளிவாய் இருங்கள். இன்று நிறைய பேர் தற் கொலை வரை செல்வதற்கான ஒரேகாரணம் அழுவதற்கு துணிவும் ஆறுதல் சொல்வதற்குயாரும் இல்லாத காரணத்தினால் தான். உங்களுக்கு நீங்களேஆறுதல் சொல்லிக் கொள்ளும் மனநிலையை எட்டிவிட்டால் யாருடைய ஆறுதலும் உங்களுக்கு தேவையில்லை. அழுகை வந்தால் அழுது விடுங்கள். முக்கியமாக ஆண்குழந்தைகளை சிறு வயதிலிருந்தே " ஆண் குழந்தைகள் அழக்கூடாது" என்று சொல்லி வளர்க்காதீர்கள். ஆணோ, பெண்ணோ அழுகை வந்தால் அழுதுவிடட்டும். அதனால் அவர்கள் மனஅழுத்தம் குறையும். அதில் தவறில்லை. ஆனால்அழுது கொண்டே இருப்பது தான் தவறு என்று சொல்லிக் கொடுங்கள். *** அனுபவஸ்தன் ***

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0