Author: THE GREAT INDIA NEWS

Category:

இது குறித்துப் பேசிய அவர், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் எரிவாயு விநியோகத்தில் இப்போது வரை ரஷ்யா நம்பகத்தன்மையுடன் நடந்து வருவதாக கூறினார். ஐரோப்பிய சந்தையில் இருந்து ரஷ்ய எண்ணெயை உடனடியாக விலக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அதற்கு ஓராண்டு ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். அதற்குள் எண்ணெய் விலை மேலும் உயர்ந்து அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசியல்வாதிகள் உணர்ந்து நேர்மையுடன் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நார்டு-2 திட்டத்தை முடக்க உங்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல் நார்டு-1 மூலம் நடைபெறும் எரிவாயு விநியோகத்தை நிறுத்த ரஷ்யாவுக்கும் உரிமை இருப்பதை மறந்து விட வேண்டாம் என்றும் நோவக் எச்சரித்துள்ளார்.

Tags:

Comments & Conversations - 0