• முகப்பு
  • other
  • மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை செய்தது யார் தெரியுமா ?

மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை செய்தது யார் தெரியுமா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். 4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை (உழைப்பை) உருவகப் படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்து இருக்கிறது. செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Do you know about the worker statue,may1 labour day,Ulaipalar Dhinam In Tamil,Ulaipalar dhinam,marina beach

VIDEOS

RELATED NEWS

Recommended