Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

அட்சய திருதியை அன்று எல்லோரும் ஒரு மூட்டை அரிசி வாங்குங்கள். 1250/- ருபாய். ஆனால் ஒரு கிராம் தங்கம் 4500/- ருபாய். அரிசி வாங்கினால் விவசாயிகள் நலம் பெறுவர். நம் வீட்டிலும் வருடம் முழுவது சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.. தங்கம் வாங்கினால் சேட்டுகளும் பணக்காரர்களும் மேலும் பணக்காரர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் பணக்காரர்கள் ஆனால் ஒரு பலனும் இல்லை.. விவசாயி பணம் படைத்தால் விவசாயம் செழிக்கும். சாப்பாடு கிடைக்கும். திட்டமிட்டு பரப்பபடும் செய்தியை நம்பி தங்கம் வாங்குவதை விட்டு விட்டு நெல்லோ அரிசியோ வாங்குங்கள். அறிவியல் பூர்வமாக பார்த்தால் தங்கம் என்பது வளரக்கூடியது அல்ல தங்கத்தை நட்டு வைத்து பாருங்கள். தானியங்கள் மண்ணில் போட்டாலே ஒன்று நூறாகும். எனவே வாழையடி வாழையாக , என மணமக்களை வாழ்த்தும் நாம் தங்கமடி தங்கமாக என வாழ்த்துவது இல்லை. மேலும் அட்சய திருதியில் வாங்கப்படும் பொருள் நமது இரத்ததில் ஊறும் படி செய்ய வேண்டும் , அப்போது தான் அட்சய திருதியின் முழு பலனை சிந்தாமல் சிதறாமல் அனுபவிக்க முடியும். எனவே மூடநம்பிக்கையை வியாபாரிகள் ஆதாயபூர்வமாக மாற்றும் போது நமக்கு அறிவிருப்பது உண்மையானால் அறிவு பூர்வமாக மாற்றுவோம். செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,anmigam,aanmeegam,anmeegam,spiritual,devotional,akshaya tritiya,akshaya tritiya 2022,akshaya tritiya benefits,akshaya tritiya in tamilnadu

Tags:

Comments & Conversations - 0