Author: THE GREAT INDIA NEWS

Category: india

கோர்ட் உத்தரவை தீர்ப்பாகவழங்கினால், அதில் சொல்லி உள்ளபடி மதித்து நடந்துக்கொள்ள வேண்டும். மீறினால் மதிக்காதவர் மீது, கோர்ட்டை அவமதித்ததாக “அவமதிப்புநடவடிக்கை” எடுக்கப் படும். அதில் அவரை சிறைவைப்பதோ, நஷ்ட ஈடு வசூலிப்பதோ, அவரின்சொத்துக்களை பறிமுதல்செய்வதோ ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப் படும். இந்த அதிகாரம் கோர்ட்டுக்கு இருப்பதால் தானே அந்த கோர்ட் அதிகாரம் மிக்கதாக இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்தசட்டத்தை யாரும் மீறிவிடாமலும், ஏளனமாக நடத்தி விடாமலும் இருக்கவும், நீதி மன்றங்கள் அவைகளை பாதுகாப்பதில் எந்தவித தடையும் வந்துவிடக்கூடாது. அவ்வாறு யாராவது சட்டத்தைமதிக்காமல் நடந்துக்கொண்டாலும் இந்த நீதி மன்றம் தான் சட்டத்தை நடைமுறைப் படுத்தி நீதியைக்காப்பாற்றும் பொறுப்பும் உள்ளவை. நீதி மன்றங்கள் எந்தத்தடையும் இல்லாமல், எந்த மிரட்டல், கட்டாயம்இல்லாமல் தீர்ப்பைவழங்கவும் நீதிபதிகளுக்கும் நீதி மன்றத்திற்கும் சுதந்திரம் வேண்டும். இவைகளை கருத்தில்கொண்டே, நீதிமன்ற அவமதிப்புசட்டம் The Contempt of Court Act கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் இல்லை என்றால் கோர்ட்டின்தீர்ப்புகள் ஒரு கேலிகூத்தாகிவிடும். ஒரு சிவில்வழக்கில் கீழ்கண்டவிஷயங்களை கோர்ட் அவ மதிப்பு என கருதுவதற்கு காரணமாக இருக்கும். 1) ஒரு நீதிமன்ற உத்தரவு இருக்கவேண்டும். 2) ஒரு கோர்ட்டுக்கு, அதில் உள்ள வழக்காடிகள் ஒரு உறுதி மொழியை கொடுத்து இருக்க வேண்டும். 3) அந்த நீதிமன்ற உத்தரவை, அந்த வழக்கில் உள்ள வழக்காளிகள் மீறி இருக்கவேண்டும் அல்லது அந்த உறுதி மொழியை மீறி இருக்க வேண்டும். 4) அவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறிஇருப்பது “வேண்டு மென்றே” மீறியதாக இருக்கவேண்டும். 5) சிவில் நீதி மன்றம் அவ மதிப்பு வழக்குகளில், நீதி மன்ற உத்தரவு இருந்து அதைமீறினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதி பதியையும், நீதியையும், நீதி மன்றத்தையும் “தவறான நோக்கத்துடன்” அவ மதிப்பாக பேசினால் கிரிமினல் அவ மதிப்பாகும். *அனுபவஸ்தன்*

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0