• முகப்பு
  • தீபம் ஏற்ற வேண்டிய முறையும் அதன் பலன்களும் தெரியுமா ?

தீபம் ஏற்ற வேண்டிய முறையும் அதன் பலன்களும் தெரியுமா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியுமா ? ஆன்மீகம் தீபங்களும் திசைகளும் : 1. கிழக்குத்திசை : கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும். 2. மேற்குத்திசை : மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை , கிரக தோஷம், பகை நீங்கும். 3. வடக்குத் திசை : வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும். 4. தெற்குத்திசை : தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது ! முகங்களுக்குரிய பலன்கள்: 1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால்- மத்திம பலன். 2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும். 3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும். 4. நான்கு முகங்கள் ஏற்றுவதால்- பசு, பூமி, பாக்கியம் தரும். 5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால்- செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும். விசேட காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும். தீப வழிபாடு: அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,anmigam,spiritual,devotional,aanmeegam,anmeegam,Do you know how to mount the lamp and its benefits

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended