இந்த நிலமோ மனையோ வாங்கவே வாங்காதீர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அனாதினம் நிலம் என்றால் என்ன? அனாதினம் நிலம் என்பது அரசாங்கம் தன் கீழ் கையகப் படுத்தி இருக்கும் உரிமை கோரப் படாத நிலம் எனலாம். 1960 க்கு முன்னர் மக்கள் சுமார் முப்பது ஏக்கருக்கு மேல் நிலங்களை நிறைய பேர் வைத்து இருந்தார்கள் ஆனால் நில உச்ச வரம்பு சட்டம் 1961 அடிப்படையில் முப்பது ஏக்கருக்கு மேல் யாராவது நிலங்களை வைத்திருந்தால் அரசாங்கம் அதனை எடுத்துக்கொண்டனர் இதனைத்தான் அனாதினம் நிலம் என்று அழைப்பார்கள். ஒருவேளை நீங்கள் பதிவுத் துறையில் உங்கள் நிலம் சம்பந்தமாகபதிவு செய்யப் பட்டிருந்தாலும், அதனை வருவாய்த்துறையினர் கண்டிப்பாக  ஏற்கமாட்டார்கள், அந்த இடங்களுக்கு பட்டாக்கிடைக்காது என்பதே உண்மை. அது மட்டும் இல்லாமல் அந்த இடங்கள் CMDA மற்றும் DTCP அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக இருக்கும் மேலும் அந்த கால அவகாசம் 29. 06. 1986 ல் தொடங்கி 29. 08. 1987 முடிந்து அதனால் அந்த இடங்களை தனிப் பட்ட நபர்கள்யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதில் தவறு எங்கே நடந்தது இதில் தவறு உங்களுடையதுதான் ஏனென்றால் முழுவதும் சரியாக விசாரிக்காமல் பத்திரத்தை படித்து வழக்கறிஞரை நாடியிருந்தால். இதுபோன்ற பிரச்சினைகள் ஏதும் வந்திருக்காது, பதிவுத் துறையில் மட்டும் இல்லாமல் நீர் நிலைகள், மேய்க்கால்,  மந்தை வெளி, போன்ற இடங்களை பதிவு செய்து விடுகிறார்கள் ஆனால் இதற்கு ஒரு போதும் பட்டா வழங்க மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். கண்டிப்பாக இதுபோன்று இருக்கும் நிலங்களை விற்கமுடியாது பதிவுத் துறையில் என்ன தான் பதிவுசெய்து இருந்தாலும் இது போன்ற செயல்களால் பல்வேறு மோசடிகள் நடக்கிறது இது மோசடியாகவே கருதப்படும். ஒருவேளை உங்களிடம்  பழையபட்டா இருந்தாலும் அதாவது காலத்தில் கொடுக்கப் பட்ட இருந்தாலும் கூட அரசு அலுவலகபதிவேட்டில் அனாதினம் நிலம்  இன்று குறிப்பிடப் பட்டிருந்தால் அத்தகைய நிலத்தை விற்பனை செய்யக் கூடாது, மேலும் இது அரசாங்கம் இந்த நிலங்களை பொதுப்பணிக்கு மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு கொடுக்கும் நோக்கில்தான் இந்த  சட்டம் கொண்டு வரப் பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் அரசாங்கம் நிலங்களை அரசாங்கத்திற்கு தெரியாமல் வீட்டு மனைகளாக விற்பனை செய்து விடுகிறார்கள் அதனை நம்பி ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கி ஏமாறுகிறார்கள். வீடு கட்டுவதற்கு மத்தியரசு விரைவில் வழங்குகிறது ரூ. 4 லட்சம். ஒருவேளை நீங்கள் நிலம் வாங்கவேண்டும் என்று முடிவு செய்தால் அந்த நிலத்தினைப் பற்றிய தகவல்களை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகள் அந்தநிலம் யாரிடம் இருந்தது அந்நிலத்தின் வில்லங்கச் சான்று போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்த பின் நிலம் வாங்கினால் நீங்கள் எந்த ஒரு பெரிய பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள். *அனுபவஸ்தன்*

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended