• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மீறி 500 H P க்கும் கூடுதலான குதிரை திரன் கொண்ட இஞ்சின் பொருத்திய படகுகளை மீன் பிடிக்க  அனுமதிக்க கூடாது - கடல் தொழிலாளர் சங்கம்.

மீறி 500 H P க்கும் கூடுதலான குதிரை திரன் கொண்ட இஞ்சின் பொருத்திய படகுகளை மீன் பிடிக்க  அனுமதிக்க கூடாது - கடல் தொழிலாளர் சங்கம்.

கார்மேகம்

UPDATED: May 8, 2023, 1:07:28 PM

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலில் பல் வேறு நெருக் கடிகளை சந்தித்து வரும் சூழலில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சி  பாம்பண் பகுதியில் நடைபெற்று வருதை இராமேஸ்வரம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  தடுத்து நிருத்த நடவடிக்கை எடுக்க கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

500 H P க்கும் கூடுதலான குதிரைத் திரன் கொண்ட இஞ்சின் பொருத்திய படகுகளை படகு உரிமையாளர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 650 மற்றும் 193 குதிரை திரன் உடைய இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகுகளில் இஞ்சின் ஹார்ஸ் பவரை கூடுதலாக்க 7 சுற்று கொண்ட கியர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் கூடுதல் குதிரைதிரன் கொண்ட இன்ஜின்கள் பொருத்தும் நடவடிக்கையை பாம்பண் விசைப் படகு உரிமையாளர்கள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

விசைப் படகுகளில் ஹார்ஸ் பவர் கொண்ட இன்ஜின்கள் பொருத்த மீன் வளத்துறை தடை விதிக்க வேண்டும் என்று இராமேஸ்வரம் மீன் வளத்துறை உதவி இயக்குனர்க்கு கோரிக்கை விடுதுள்ளோம்,

விசைப்படகுகளில் கூடுதல் திரன் கொண்ட இன்ஜின்கள் பொருத்துவதை மீன் துறை உடன் தடுத்து நிருத்தி ஆழ்கடலில் உள்ள மீன் குஞ்சுகள் அழிவதை தடுக்க வேண்டும் என்று கடல் தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கை  விடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended