திமுக இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பட்டிமன்ற பொதுக்கூட்டம்.

L.குமார்

UPDATED: May 10, 2023, 12:33:19 PM

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பட்டிமன்ற பொதுக்கூட்டம் மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மு. பகலவன், மாவட்ட துணை செயலாளர் மு.கதிரவன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், உள்ளிட்டவர்கள் முன்னில வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களை குறித்து விளக்கமாக பேசினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended