• முகப்பு
  • tamilnadu
  • திமுக vs அதிமுக ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் மக்களே.

திமுக vs அதிமுக ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் மக்களே.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 'ஏதோ ஒரு வகையில்' ஆசிரியர் கிடைப்பது மகிழ்ச்சி. ஜூலை முதல் பிப்ரவரி வரை எட்டு மாதங்கள்.* *மாதம் ஊதியம்:* *இடைநிலை 7,500/-* *பட்டதாரி 10,000/-* *முதுநிலை 12,000/-* *தமிழ்நாடு அரசு திறன் பெற்ற தினக் கூலிக்கு (skilled worker) நிர்ணயத்திறுக்கும் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ₹39/-.* *கிட்டத்தட்ட வேலை நேரம் நேரத்தை, வேலை நாட்களை கணக்கில் எடுத்தால் அந்த ஊதியம் தான் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.* *அதை விட சற்று கூடுதலாக ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு, அதை விட இன்னும் சற்று கூடுதலாக முதுநிலை ஆசிரியருக்கு.* *ஜூலை முதல் பிப்ரவரி வரை பாடம் நடக்கும் அதன் பிறகு மாதிரி தேர்வுகள், தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடக்கும்.* *ஆக, இந்த காலத்தில் ஆசிரியர் தேவை இல்லை.* *தினக்கூலி நிலையில் ஆசிரியர் நியமனம் நடத்தி, ஒரு கல்வி ஆண்டை கடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ஒர் நல்வாழ்வு அரசு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கையா? என்பதை பரிசீலிக்க வேண்டும்.* *தற்காலிகப் பணிக்காலத்தில் வேலை செய்யும் நாட்களில் உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்தப்பட்ச உணவு, உடை‌, இருப்பிடம் என்று வாழ்கையை கடத்த மட்டுமே ஊதியம் பெற்றவர்கள், பணியும், ஊதியம் இல்லாத மாதங்களில் எப்படி உயிர் வாழ்வார்கள்?* *8 மாதம் பாடம் நடத்தி தேர்விற்கு மாணவர்களை தயார் செய்த ஆசிரியர்கள், மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஆகிய நான்கு மாதங்கள் வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல் இருப்பார்கள்.* *நாடாளுமன்ற பொதுத் தேர்தலையே இரண்டு மாதங்களில் நடத்தி முடிக்கிறது தேர்தல் ஆணையம்.* *ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டு மாதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்து நிரந்தரமாக காலி பணியிடங்களை நிரப்ப இயலாதா?* *தற்காலிக பணி, தினக் கூலி அளவு ஊதியம் என்பது ஆசிரியர் பணியைச் சிறுமைப் படுத்துவதோடு, எத்தகைய மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாவார்கள்.* *ஏழ்மையை, வறுமையை பயன்படுத்தி நடத்தப்படும் உழைப்பு சுரண்டல் இல்லையா?* ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என கூறிவிட்டு நிதி இல்லை என கைவிரித்துவிட்டு. இப்போது அதே தவறை பெரிய அளவில் அரங்கேற்றுவது நியாயமா? இது மனிதத்தன்மையா? எம்எல்ஏ சம்பளத்தை இருமடங்காக ஏற்ற நினைக்கும் திமுக அரசுக்கு அதற்கு மட்டும் நிதி எப்படி எங்கிருந்து கிடைக்கிறது? குறுக்கு வழியில் கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு லட்சங்களில் சம்பளம். நேர்மையான ஆசிரியர் தொழிலுக்கு கூலிவேலையை விட கேவலமான குறைந்த சம்பளம். *அரசு உழைப்பு சுரண்டலில் ஈடுபடுவது நியாயமா?* *இது சமமான கற்றல் வாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?* *ஆசிரியர் ஊதியம், ஆசிரியர் நியமனம் சமமற்ற நிலையில் இருக்கும்.* *ஆனால் மதிப்பீடு மட்டும் சமமாக இருக்கும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் முன் வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?* *அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக உள்ள மனநிலை மாறாமல் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவது கடினம்.* ******அனுபவஸ்தன்*****

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended