• முகப்பு
  • district
  • கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மேயர் உடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு !

கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மேயர் உடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் மாநகராட்சி கூட்டம் மாலை தொடங்கியது. கூட்டத்திற்கு மேயர் சரவணன்(காங்) தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் செந்தில் முருகன் கூட்டத்தில் 48 உறுப்பினர்களில் 45 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 55 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மன்றத்தில் வைக்க வரைவு செய்யப்பட்ட தீர்மானங்கள் 57 ஆகும். கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய தீர்மானங்கள் அனைத்தும் இன்றைய கூட்ட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா என மேயர் சரவணனை பார்த்து குட்டி தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த மேயர் ஆம் எனக் கூறினார். இதனை ஏற்காத குட்டி தட்சணாமூர்த்தி துணை மேயரின் நிர்வாக வசதிக்காக கொண்டுவரப்பட்ட முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என மாநகராட்சி மேயர் சரவணனை பார்த்து கேள்வி கேட்டார். அந்த தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாநகராட்சிக்கு தணிக்கையில் கேள்வி உருவாகும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதனால் நிறுத்தி வைத்துள்ளேன்‌. எனவே அதற்கு நான் ஒப்புதல் அளிக்க முடியாது எனக் கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த திமுக உறுப்பினர்கள் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு மாநகராட்சியின் நலனைக் கொண்டு கொண்டுவரப்பட்ட திட்ட வரைவுகளை நீங்கள் எப்படி நிறுத்தலாம் என மாறி மாறி ஒரே நேரத்தில் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் கூறுங்கள் என உறுப்பினர்கள் கேட்டதற்கு சுமார் 20 நிமிடங்கள் பதில் சொல்லாமல் மேயர் மௌனமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியைச் சேர்ந்த 45 உறுப்பினர்களும் 20 நிமிடங்கள் கூட்ட செயல்பாட்டினை நிறுத்திவைத்து மௌனமாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய துணைமேயர் சு.ப. தமிழழகன், நான் ஒரு பாரம்பரிய, பல்வேறு உயர் பதவிகள் வகித்த தி.மு.க.குடும்பத்தில் இருந்து வந்தவன். மிசா என்கிற நெருக்கடி நிலையின் போது அதிமுக பிரமுகரான எனது தந்தை பல வருடங்கள் சிறையில் கழித்தவர். நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு கார் இருந்தால் தான் மாநகராட்சி பணிகளை ஆற்ற முடியும் என்பதில்லை. நான் காரை எதிர்பார்த்து மாமன்றத்திற்கு வரவில்லை. மேயருக்கு எனக்கு கார் வழங்குவதில் ஒப்புதல் இல்லை . எனவே துணை மேயராக இருக்கும் எனக்கு கார் தேவையில்லை எனக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக உறுப்பினர்கள் மேயரிடம் ஒரே நேரத்தில் மாநகராட்சி பணிகள் தொடர்பான பல்வேறு கேள்விகளை தொடர்ந்து கேட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த மேயர் சரவணன் இப்பொழுது தான் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் இதற்கு முன்னால் துணை மேயர் பார்த்துதான் கேள்வி கேட்டீர்கள், எனவே இனிவரும் கூட்டங்களில் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேன் என மேயர் சரவணன் கூறினார். இதனைத் தொடர்ந்து தாராசுரத்தில் குப்பைகளை அகற்றுவதற்கு கூடுதல் வாகனங்கள் தேவை என பத்ம. குமரேசனும், (அதிமுக) சாலைகளை உடனடியாக போட வேண்டுமென ஆதிலட்சுமி (அதிமுக) கூட்டத்தில் விவாதம் செய்தனர். திமுக கூட்டணியின் ஆதரவோடு மாநகராட்சி மேயரான சரவணனும் அதே கூட்டணியே சேர்ந்த திமுக உறுப்பினர்களும் மாநகராட்சி கூட்டத்தில் மோதிக்கொண்ட சம்பவம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended