• முகப்பு
  • political
  • நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் ஆ.இராசா எம்.பி., அவர்களுடன் சந்திப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் ஆ.இராசா எம்.பி., அவர்களுடன் சந்திப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டம், கழக துணை பொது செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாண்புமிகு தமிழக அரசின் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உச்சநீதிமன்றம், இந்தியா முழுவதும் உள்ள வன பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சற்றுவட்டார பகுதியினை “பப்பர் சோன்” என அறிவிக்க உத்தேசித்து கருத்தினை வெளியிட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் இப்பிரச்சனை குறித்து தெளிவான விவரங்களை தெரிவித்து, கூடலூர் தொகுதி மக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கோரிக்கை மனு வழங்கினர். நீலகிரி எம்.பி., ஆ.இராசா அவர்கள் கூறுகையில், பப்பர் சோன் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முழு விவரங்களையும் படித்து பார்த்து, வனத்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருடன் கலந்து பேசியும், மற்ற மாநிலங்களில் இப்பிரச்னைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து. தமிழக முதல்வர் அவர்களிடம் இவைகள் குறித்து தெரிவித்து, வனத்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 3 மாத கால அவகாசத்தை முறையாக பயன்படுத்தி தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்து "பப்பர் சோன்" பிரச்சனையிலிருந்து கூடலூர் பகுதி மக்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது, கூடலூர் பகுதியில் தீர்க்கவேண்டிய முக்கிய பிரச்னைகளான பிரிவு 17 நிலப்பிரச்னை, மின்சாரம் மற்றும் டான்டீ தொழிலார்களுக்கான பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, முஸ்தபா, பாண்டியராஜ், செந்தில், முன்னாள் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், காங்கிரஸ் கட்சி சார்பில் அம்சா, ரவி, சாஜி சி.பி.எம் சார்பில் விவசாய பிரிவு செயலாளர் வாசு, மணி, சி.பி.ஐ சார்பில் முகமது கனி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் அனீபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் க.சகாதேவன், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், தொமுச சார்பில் டி.கே.மாடாசாமி, AITUC பெரியசாமி, INTUC லோகநாதன், வியாபாரிகள் சங்கம் சார்பில் கந்தையா, மக்கள் வாழ்வுரிமை கட்சி சார்பில் வர்கீஸ்,உட்பட பலர் கலந்துகொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended