• முகப்பு
  • திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி கூட்டம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை : மேற்பார்வை குழுவின் தலைவரும், எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். இணைத்தலைவரும், எம்.பி.யுமான விஷ்ணுபிரசாத், சட்டமன்ற துணைத்தலைவர் பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், பிரதான மந்திரி கிசான் சம்மன் நிதி, மண் சுகாதார அட்டை, வேளாண் எந்திரமயமாக்குதலுக்கான இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், மதிய உணவு திட்டம், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் முன்னேற்றங்கள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது நடந்து வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை முழு வீச்சில் துரிதப்படுத்தி முடிக்க வேண்டும், என சி.என்.அண்ணாதுரை எம்.பி. தெரிவித்தார். பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த முதல் நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Latest thiruvannamalai news,Breaking news thiruvannamalai,District Rural Development at the Thiruvannamalai District Collector's Office

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended