Author: மாமுஜெயக்குமார்
Category: மாவட்டச் செய்தி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னனு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் வேளாண்மை வணிக ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தேர்தல் வட்டாட்சியர்கள் செல்லப்பா, ஸ்ரீதரன் மாணிக்கம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
#Ramanathapuramnews, #electionmachine #votingmachine #inspection #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்