• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டை அருகே திரவ ரசாயன யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு...!!!

உளுந்தூர்பேட்டை அருகே திரவ ரசாயன யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு...!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட டி. ஒரத்தூர் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனம் இணைந்து நானோ யூரியா ட்டோரன் மூலம் தெளிப்பு குறித்து செயல் விளக்க கூட்டம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நானோ யூரியாவை பயன்படுத்தும் முறையை குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த திரவ ரசாயன யூரியாவை இலைகள் மூலம் செலுத்துவதால் அதிக மகசூல் தரும் என எடுத்துரைத்து விளக்கிக் கூறினார்கள். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிருக்கு திரவ ரசாயன யூரியாவை ட்ரோனில் கலக்கும் விதம் குறித்து கேட்டறிந்த பின்பு தெளிக்கும் பணியை ஆய்வு செய்தார் அப்போது அரசு அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended