• முகப்பு
  • கல்வி
  • திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை.

திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை.

கோபிநாத்

UPDATED: May 8, 2023, 11:02:11 AM

12 ஆம் வகுப்பு தேர்வுகள் தமிழகத்தில் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகம், கணினி, கணக்கியல் உள்ளிட்ட ஆறு படங்களிலும் 100க்கு முழு மதிப்பெண் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் படித்த பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி. அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended